Results 1 to 1 of 1

Thread: உபுண்டுவில் தினத் தந்தி வாசிக்க..

  1. #1
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    உபுண்டுவில் தினத் தந்தி வாசிக்க..

    நேற்று ஆயிரம் பேருந்துகளை தமிழக முதல்வர் துவக்கி வைத்த சேதியை தினத் தந்தியில் வாசிக்க ஆவலாய் பயர்பாக்ஸ் துவக்கி தினந்தந்தி தளத்திற்கு சென்றால் எழுத்துக்கள் திரிந்து காணப்படுகிறதா?

    தினத் தந்தி தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள மின்னெழுத்தினை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். பயர்பாக்ஸில் இருந்து பதிவிறக்கியிருந்தால் மேசைமீது பதிவிறங்கும்.

    Application --> Accessories --> Terminal மூலம் முனையத்தினைத் துவக்கவும்.

    ttf-tamil-fonts பொதி நிறுவப்படாது இருக்குமாயின்,

    $ sudo apt-get install ttf-tamil-fonts ஆணையிட்டு நிறுவிக் கொள்க.

    (sudo இடும் போது கடவுச் சொல் கோரப் பட்டால் தங்களது கடவுச் சொல்லினைப் பயன்படுத்துக.)

    அடுத்து,

    $ cd /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/

    $ sudo mv /home/<user_name>/Desktop/Eltpan-n.ttf .

    (அதாவது மின்னெழுத்து பதிவிறக்கப் பட்டதாக பாவிக்கப் பட்டுள்ள மேசைத் தளத்தின் அடைவிலிருந்து மின்னேழுத்துக்களுக்குரிய அடைவிற்கு மின்னேழுத்து நகர்த்தப் படுகிறது. ஆணையின் இறுதியில் புள்ளி இருப்பதை மறக்க வேண்டாம்.)

    கீழ்காணும் ஆணைகளிடவும்,

    $ sudo mkfontscale

    $ sudo mkfontdir

    $ sudo fc-cache

    பயர்பாக்ஸ் உலாவியினை மீளத் துவங்கவும். தினத் தந்தி தெளிவாகத் தெரிய வேண்டும்.
    Attached Images Attached Images
    Last edited by amachu.techie; January 4th, 2008 at 05:44 PM.
    ஆமாச்சு

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •