Results 1 to 1 of 1

Thread: கேயுபுண்டுவில் தமிழ்99 வசதிகள்..

  1. #1
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    கேயுபுண்டுவில் தமிழ்99 வசதிகள்..

    வரைகலை இடை முகப்பினைக் கொண்டு

    முதலில் தமிழ் கேயுபுண்டு பொதியினைப் பதிவிறக்கிக் கொள்ளவும். பதிவிறக்கப் பட்ட கோப்புள்ள அடைவிற்குக் கான்கொயரர் மூலம் பயனித்து, கோப்பினைத் தேர்வு செய்து அதன் மீது வலது புறமாக சொடுக்குங்கள். மேலுழும்பும் சாளரத்தில், Extract --> Extract to tamil- kubuntu-edgy என்பதனைத் தேர்வு செய்யுங்கள். பின்னர் விரிக்கப் பட்டு உருவாக்கப் படும் tamil-kubuntu-edgy அடைவினுள் பயனித்து, அனைத்து கோப்புகளையும் தேர்வு செய்ய Ctrl-A சொடுக்கவும். பின்னர் வலது புறமாகச் சொடுக்கி மேலெழும்பும் சாளரத்தில் Kubuntu Package Menu --> Install Package தேர்வு செய்தால் நிரல்கள் நிறுவப் பெற்று, அடுத்த அமர்வில் தமிழ்99 பயன்படுத்துவதற்கான அனைத்து வசதிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

    முனையத்தின் துணையுடன்

    முதலில் தமிழ் கேயுபுண்டு பொதியினைப் பதிவிறக்கிக் கொள்ளவும். முனையத்தினைத் துவக்கி பதிவிறக்கப் பட்ட கோப்பிருக்கும் அடைவிற்கு cd ஆணையின் துணைக் கொண்டு பயனிக்கவும்.

    பின்னர்,

    $ tar xzvf tamil-kubuntu-edgy.tar.gz

    ஆணைக் கொடுத்தால் நிறுவப் பட வேண்டிய அனைத்து கோப்புகளும் விரிக்கப் பட்டு தாங்கள் இருக்கக் கூடிய நிகழடைவில் போடப்படும். எனவே இதற்கென தனியொரு அடைவினை உருவாக்கி அதனுள் tamil-kubuntu-edgy.tar.gz னை நகலெடுத்து பின்னர் அவ்வடைவிலிருந்து தாங்கள் இவ்வாணையினை வழங்கலாம்.

    கீழ்காணும் ஆணையினைக் கொடுத்தால் அனைத்து டெபியன் பொதிகளும் நிறுவப் பட்டு அடுத்த அமர்விலிருந்து தமிழ்99 உள்ளிட்ட ஏனைய உள்ளீட்டு வசதிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

    $ sudo dpkg -i *.deb

    பி.கு: தமிழ்99 ன் அவசியம் குறித்து அறிய http://amachu.net/blog/?p=41 பக்கத்தினை அணுகவும்...
    Last edited by amachu.techie; September 12th, 2007 at 08:43 AM.
    ஆமாச்சு

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •