கேயுபுண்டு வில் இயல்பாய் நிறுவப் படும் கான்கொயரர் உலாவியில் gmail ன்
வசதிகள் இயல்பாய் கிடைக்காத சூழல்..

இதற்கு கான்கொயரர் நெறிகளை தழுவி நிற்பதும், ஜி மெயில் நெறிகளிலிருந்து
நழுவி இருப்பதும் காரணமாகக் கூறப்படுகிறது..

சரி! அப்போ ஜிமெயிலை அனைத்து வசதிகளுடன் கான்கொயரரில் பயன்படுத்த
முடியாதுன்னு நினைச்சா மாத்திக்கோங்க!இதுக்கு ஒரு வழி இருக்கு. ஜிமெயில் இணைய தளத்துக்கு உங்க உலாவியை
பயர்பாக்ஸுன்னு அடையாளம் காட்டினா போதும்.. கான்கொயரரில் ஜிமெயில் வசதி
தானா வரும்...

கான்கொரர் --> அமைப்புகள் --> கான்கொரர் வடிவமை --> உலாவி அடையாளம் -->
களம் குறித்த அடையாளம்

பின்னர் "புதிய" பொத்தானைச் சொடுக்கி மேலெழும்பும் சாளரத்தில் "பின்வரும்
தளம் உலாவுதல் போது" களத்தில் gmail.com கொடுக்கவும்...

"பின்வரும் அடையாளத்தைப் பயன்படுத்து" களத்தில் Firefox தேர்வு செய்யவும்..

ஜிமெயிலைப் பொறுத்தவரை இனி உங்கள் உலாவி பயர்பாக்ஸ்...

நன்றி...

குறிப்பு: அனைத்து வசதிகளும் கிடைக்கிறதா என்பதை சோதித்துப்
பார்க்கவில்லை... இதை செய்யும் முன் ஜிமெயில் To: களத்தில் முகவரி
கொடுக்க முயலும் போது முகவரித் தொகுப்பிலிருந்து முகவரி சுயமாய் தோன்றாது
இருந்தது. அது களையப் பட்டுள்ளது.