Results 1 to 2 of 2

Thread: கேயுபுண்டு நிறுவும் முறை.. (எட்ஜி)

  1. #1
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    கேயுபுண்டு நிறுவும் முறை.. (எட்ஜி)

    கேயுபுண்டு கே பணிச்சூழலை அடிப்படையாகக் கொண்ட, உபுண்டு நிறுவனத்தால் ஊக்குவிக்கப் படும் இயங்கு தளம். 256 MB நினைவாற்றல் கொண்ட கணினி பரிந்துரைக்கப் படுகிறது.

    கேயுபுண்டுவை பதிவிறக்க: http://kubuntu.com/download.php

    படி1: குறுவட்டு இயக்கியிலிருந்து துவங்கும் படிக்கு கணினியினை அமைக்கவும். நிகழ் வட்டிலிருந்து துவக்கப் பெற்ற கேயுபுண்டு.



    படி2: நிறுவுவதற்கான மொழியாகத் தமிழ் மொழி தேர்வு செய்யப் படுகின்றது.





    படி3: உலகில் தாங்கள் வசிக்கும் பகுதியின் நேர நியமத்தினைத் தேர்வு செய்ய உதவும் திரை.



    படி4: விசைப் பலகையின் கோளத்தினை தேர்வு செய்க. இதன் பயன்பாடு சந்தேகமே!



    படி5: தங்களைப் பற்றிய விவரத்தினையும் கணினியின் விவரத்தையும் பதிவு செய்ய...



    படி6: வன்தட்டினை சுயமாக பகுக்க முடிவு எடுக்கப் படுகிறது.



    படி7: வன்தட்டு பகுக்கப் பட்ட பின்னர் தெரியும் திரை. இவ்விடத்தில் ஏற்கனவே உபுண்டுவிற்கான இரண்டு பகுப்புகள் உள்ளன (sda1 & sda2). தற்போது குபுண்டு நிறுவ இரண்டு பகுப்புகள் தேவை. (1) "/" (மூலம்) பகுப்பு. குறைந்தது 5GB இருத்தல் நல்லது. (2) தங்களின் RAM னுடைய நினைவினைக் காட்டிலும் இருமடங்கு உள்ள linux-swap வகை பகுப்பு. தங்களின் RAM 512 MB இருந்தால், இப்பகுப்பு 1 GB இருத்தல் நல்லது. இவ்விடத்தில் sda3 மூல பகுப்பாகவும் ("/"), sda4 linux-swap பகுப்பாகவும் பகுக்கப் பட்டுள்ளதைக் காணலாம். இல்ல அடைவுகளை காக்க /home என்றொரு பகுப்பு இருத்தல் நல்லது. எமக்கு அவசியம் இல்லை என்பதால் இங்கே அவ்வாறு செய்யவில்லை.



    தொடர்ச்சி: http://ubuntuforums.org/showthread.php?t=409311
    Last edited by amachu.techie; April 14th, 2007 at 05:22 PM.
    ஆமாச்சு

  2. #2
    Join Date
    Jan 2005
    Location
    Brookline, MA
    Beans
    1,059
    Distro
    Ubuntu 10.10 Maverick Meerkat

    Re: கேயுபுண்டு நிறுவும் முறை.. (எட்ஜி)

    I take that as: huzzah! Tamil is working!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •