Results 1 to 2 of 2

Thread: உபுண்டுவில் Jre

  1. #1
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    உபுண்டுவில் Jre

    ஜாவா வசதி பயர்பாக்ஸில் மெருகேற்றப் படாத நிலையிலுள்ள இணையதளம்,



    கீழ்காணும் பக்கத்திலிருந்து Java Runtime Environment (JRE) 6 னை பதிவிறக்கவும்.

    http://java.sun.com/javase/downloads/index.jsp

    பதிவறக்கத் தேர்ந்தெடுக்கப் பட்டக் கோப்பின் பெயர்: jre-6-linux-i586.bin

    இக்கோப்பின் மீதுள்ள உரிமைகளை தீர்மானிக்க முதன்மைப் பயனருக்கான அதிகாரத்துடன்,

    $ sudo chmod +x jre-6-linux-i586.bin

    பின்னர் தாங்கள் விரும்பும் அடைவிற்கு இக்கோப்பினை நகர்த்தவும்.

    நாம் இதனை /home/amachu என்ற எமது இல்ல அடைவிற்கு மாற்றினோம்.

    $ sudo mv jre-6-linux-i586.bin /home/amachu

    கோப்பானது நகர்த்தப் பட்ட இடத்திற்கு பயனிக்கவும்,

    $ cd /home/amachu

    கோப்பினை செயற்படுத்த கீழ்காணும் கட்டளையினைக் கொடுக்கவும்,

    $ ./jre-6-linux-i586.bin

    jre1.6.0 என்ற அடைவு உருவாக்கப் பட்டிருக்கும்.

    ஜாவா பணிச்சூழல் மாறிகளை பதியச் செய்ய கீழ்காணும் கட்டளைகளை கொடுக்கவும்,

    $ export JAVA_HOME=/jre1.6.0/

    $ export PATH=$PATH:$JAVA_HOME/bin

    ஆக இன்னும் பயர்பாக்ஸ் உலாவியில் ஜாவா வசதியை மெருகேற்றுவது மட்டுமே மீதமுள்ளது...

    அதற்கு, /home/amachu/jre1.6.0/plugin/i386/ns7/libjavaplugin_oji.so கோப்பினுக்கான இணைப்பை /usr/lib/firefox/plugins அடைவினுள் ஏற்படுத்த வேண்டும்.

    இதனை பூர்த்தி செய்ய,

    $ cd /usr/lib/firefox/plugins

    அடைவினுள் பயனித்தப் பின்னர் கீழ்க் கண்டவாறு இணைப்பினை ஏற்படுத்தினோம்.

    # sudo ln -s /home/amachu/jre1.6.0/plugin/i386/ns7/libjavaplugin_oji.so .

    இனி ஜாவா மெருகேற்றப் பட்ட இணைய தளங்களை பிரச்சனையின்றிப் பார்க்கலாம்.

    ஜாவா வசதி பயர்பாக்ஸில் மெருகேற்றப் பட்ட நிலையிலுள்ள அதே இணையதளம்,

    Last edited by amachu.techie; January 31st, 2007 at 06:39 PM.
    ஆமாச்சு

  2. #2
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    Re: உபுண்டுவில் Jre

    ஐஸ் வீஸல் உலாவிக்கும் இம்முறை பொருந்துமென தோன்றுகிறது

    ஐஸ் வீசல் /usr/local/Iceweasel அடைவினுள் நிறுவப்பட்டிருந்தது.
    ஆமாச்சு

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •