Results 1 to 1 of 1

Thread: கெய்ம் மூலம் Irc

  1. #1
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    கெய்ம் மூலம் Irc

    உபுண்டுவோடு நிறுவப் பெறும் கெய்ம் (Gaim) செயலியின் துணைக் கொண்டு IRC உரையாடலில் பங்கு கொள்வது குறித்துப் பார்க்கலாம்.

    முதலில் Applications --> Internet --> Gaim Internet Messenger தேர்வு செய்வதன் மூலம் கெய்ம் செயலியைத் துவக்குங்கள்.



    மேலே காண்பதைப் போன்று Accounts என்றத் தலைப்புடன் தோன்றும் சாளரத்தில் Add எனத் தெரிகின்ற பொத்தானை சொடுக்கவும். Add Account என்ற தலைப்புடன் சாளரம் ஒன்று தோன்றும்.

    இச்சாளரத்தில் கீழ் காணும் விவரங்களை தேர்வு/ பூர்த்தி செய்யவும்.

    Protocol: IRC

    Screen Name: <தங்களின் புனைப் பெயர்> ## இப்புனைப் பெயர் IRC சேவக மையத் தோடு பதியப் பட்டிருத்தல் நல்லது.

    Server: <IRC சேவக மையத்தின் பெயர்> ## பொதுவாக நாம் பயன்படுத்துவது irc.freennode.net

    Password: சேவக மையத்தோடு தங்கள் பெயர் பதிவு பெற்றிருந்தால் அதன் கடவுச் சொல்

    Alias: தாங்கள் எங்ஙனம் அறியப் பட விரும்புகிறீர்களோ அப்பெயரை பதிவு செய்யுங்கள்.

    கடவுச் சொல்லை நினைவில் நிறுத்த விரும்பினால் Remember Password னைத் தேர்வு செய்யலாம்.

    Save பொத்தானை சொடுக்கவும்



    சிறிது விநாடிகள் பொறுத்த பின்னர் மேலே காணும் படி Nick Serv என்ற தலைப்பிடப் பட்ட சாளரம் தோன்றும். அதிலுள்ள உள்ளீட்டுப் பட்டியில் தாங்கள் நுழைய விரும்பும் வாயிலின் பெயரைப் பதிவுச் செய்யவும். உபுண்டு தமிழ் குழுமத்தின் வாயில் #ubuntu-tam

    பதிவு செய்வதற்கான கட்டளை: /join #ubuntu-tam



    மேற்படி படத்தில் காணும் படிக்கு தாங்கள் பதிவு செய்த வாயிலில் நுழைந்து அங்குள்ள, பிற பயனர்களுடன் தங்கள் உரையாடலைத் தொடரலாம்.
    Last edited by amachu.techie; January 27th, 2007 at 10:26 AM.
    ஆமாச்சு

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •