PDA

View Full Version : ஜிமெயில்- ல் தமிழ் எழுத்துக்கள்- சிக்கல்..



ilanv
August 13th, 2008, 11:17 PM
வணக்கம்,
நான் உபுன்டு 8.04 - தமிழ் மொழியில் இன்ஸ்டால் செய்து இருக்கிறேன்.

இப்போது.. கூகிள் சேவை தொடர்பான தளங்கள் எல்லாம்..(ஜிமெயில், ப்ளாக்கர், யூட்யூப்...) ஃபயர்ஃபாக்ஸ்- இல் திறந்தால்...

ஆங்கில எழுத்துக்கள் மீதெல்லாம்... கன்னாபின்னாவென்று.. தமிழ் எழுத்துக்கள் போய் ஒட்டிக்கொண்டு.. தளங்களை பயன்படுத்த முடியாதப்டி இருக்கிறது. ( யாஹூமெயில்- தளமும் இப்படிதான் தெரிகிறது.

ஸ்க்ரீன்ஷாட் இணைத்துள்ளேன்.

எப்படி இதை சரி செய்வது என்று சொல்லுங்கள்.

நான் முதல் முறை லினக்ஸ் பயனர். உபுன்டு தமிழ் மிகவும் நன்றாக இருக்கிறது. அதற்காக உழைக்கும் உங்களுக்கு நன்றி.

amachu.techie
August 21st, 2008, 03:38 PM
இதனை உபுண்டு தமிழ் குழுமத்துக்கு முன்வைத்துள்ளேன். அங்கிருப்போருக்கும் இத்தகைய சிக்கல் இருக்கான்னு பார்க்கலாம்.

--
ஆமாச்சு

ilanv
August 23rd, 2008, 12:08 AM
பதிலுக்கு நன்றி.

ஒரு சிறு விளக்கம்.

கணினியின் இடைமுக மொழியாக (user interface language)தமிழ் இருந்தால் இந்த சிக்கல் வருகிறது. இடைமுகத்தை ஆங்கிலமாக மாற்றினால் இந்த சிக்கல் வருவதில்லை.

தமிழ் இடைமுகத்தில் மட்டும் ஏன் வருகிறது என்று குழப்பமாக இருக்கிறது.

amachu.techie
September 1st, 2008, 08:31 AM
இது பற்றிய தமிழ் குழும மடலாடற் குழு உரையாடலை கவனிக்க,

https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-August/001566.html

ilanv
September 3rd, 2008, 02:39 AM
மிக்க நன்றி திரு. ஆமாச்சு, திரு. மயூரன்.

திரு. மயூரன் கூறியது போல ttf-core fonts indic பொதியை நீக்கி விட்டு மீண்டும் உலாவியை செயற்படுத்தினால் சரியாக வருகிறது.

மீண்டும் நன்றிகள் !!

- ilanv

karth83
June 20th, 2009, 02:07 PM
எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது. firefoxல் font size மாற்றியதும் சரியாகி விட்டது :)