PDA

View Full Version : உபுண்டுவில் தினத் தந்தி வாசிக்க..



amachu.techie
January 4th, 2008, 07:09 AM
நேற்று ஆயிரம் பேருந்துகளை தமிழக முதல்வர் துவக்கி வைத்த சேதி (http://dailythanthi.com/article.asp?NewsID=384793&disdate=1/4/2008&advt=1)யை தினத் தந்தியில் வாசிக்க ஆவலாய் பயர்பாக்ஸ் துவக்கி தினந்தந்தி தளத்திற்கு சென்றால் எழுத்துக்கள் திரிந்து காணப்படுகிறதா? (http://ubuntuforums.org/attachment.php?attachmentid=55242&stc=1&d=1199435196)

தினத் தந்தி தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள மின்னெழுத்தினை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். (http://dailythanthi.com/fontdownload/Eltpan-n.ttf) பயர்பாக்ஸில் இருந்து பதிவிறக்கியிருந்தால் மேசைமீது பதிவிறங்கும்.

Application --> Accessories --> Terminal மூலம் முனையத்தினைத் துவக்கவும்.

ttf-tamil-fonts பொதி நிறுவப்படாது இருக்குமாயின்,

$ sudo apt-get install ttf-tamil-fonts ஆணையிட்டு நிறுவிக் கொள்க.

(sudo இடும் போது கடவுச் சொல் கோரப் பட்டால் தங்களது கடவுச் சொல்லினைப் பயன்படுத்துக.)

அடுத்து,

$ cd /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/

$ sudo mv /home/<user_name>/Desktop/Eltpan-n.ttf .

(அதாவது மின்னெழுத்து பதிவிறக்கப் பட்டதாக பாவிக்கப் பட்டுள்ள மேசைத் தளத்தின் அடைவிலிருந்து மின்னேழுத்துக்களுக்குரிய அடைவிற்கு மின்னேழுத்து நகர்த்தப் படுகிறது. ஆணையின் இறுதியில் புள்ளி இருப்பதை மறக்க வேண்டாம்.)

கீழ்காணும் ஆணைகளிடவும்,

$ sudo mkfontscale

$ sudo mkfontdir

$ sudo fc-cache

பயர்பாக்ஸ் உலாவியினை மீளத் துவங்கவும். தினத் தந்தி தெளிவாகத் தெரிய வேண்டும். (http://ubuntuforums.org/attachment.php?attachmentid=55243&stc=1&d=1199435196)