amachu.techie
May 24th, 2007, 05:01 PM
உபுண்டு மற்றும் கேயுபுண்டுவில் முதன்மைப் பயனராக (root user) பயனிக்கும் வசதி இயல்பாகக் கிடைக்கப் பெறாது.
கேயுபுண்டுவில் முதன்மைப் பயனராக பயனிப்பது தவிக்கப் படவேண்டிய ஒன்றாகப் பரிந்துரைக்கப் படுகின்றது. முதன்மைப் பயனரின் அதிகாரங்களுக்கு உட்பட்டு செயல் படுத்தக் கூடிய நிரல்களை sudo மற்றும் kdesu கட்டளைகளைக் கொண்டு செய்யலாம்.
தவிர்க்க இயலாத காரணங்களுக்காக முதன்மைப் பயனராக பயனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கீழ்காணும் முறைகளைப் பின்பற்றவும்.
1) முனையத்திலிருந்து,
$ sudo passwd root
தங்களின் முதன்மைப் பயனருக்கான சாவியினை (password) கொடுத்து மீண்டும் உறுதி செய்யவும்.
2) அடுத்து,
$ sudo kate /etc/kde3/kdm/kdmrc
கொடுத்து, AllowRootLogin=false என்றிருக்கும் பதிவினை AllowRootLogin=true
என மாற்றி கோப்பினைக் காத்து வெளியேறவும்.
அடுத்த முறை அமர்வொன்றினைத் துவக்கும் போது முதன்மைப் பயனராக தங்களால் பயனிக்க இயல வேண்டும்.
நன்றி.