amachu.techie
May 13th, 2007, 07:27 PM
அண்ணாச்சி,
என்கிட்ட ஒரு மடிக்கணினியும் ஒரு மேசைக் கணினியும் இருக்குங்க.. மடிக் கணினில உபுண்டு எட்ஜியும் மேசைக் கணினில எடுபுண்டு பைஸ்டியும் நிறுவினோமுங்க!
சரி ரெண்டும் பக்கத்தாப்ல தான இருக்கு.. இதுல இருக்கற கோப்பை அதுக்கும் அதுல இருக்கற கோப்பை இதுக்கும் மாத்தினா என்னன்னு தோணிச்சு! ரெண்டுத்தையும் சேர்க்கறத்துக்கு முன்னாடி ரெண்டுத்த பத்தின விவரத்தையும் சுருக்கமா பாப்போமா!
மடிக்கணினி:
பெயர்: amachu-laptop
இயக்கு தளம்: உபுண்டு எட்ஜி
இதோட ஐ.பி முகவரி 192.162.0.2 ங்க. இதைச் செய்ய
$ sudo vim /etc/network/interfaces
கொடுத்து... iface eth0 inet dhcp ன்னு இயல்பாய் இருக்கும் வரியினை கீழே இருக்கறாப்ல மாத்தினோமுங்க!
iface eth0 inet static
address 192.168.0.2
netmask 255.255.255.0
மேசைக்கணினி:
பெயர்: kuzhal
இயக்கு தளம்: எட்-உபுண்டு பைஸ்டி
இதோட ஐ.பி முகவரி 192.162.0.3. இதைச் செய்ய

address 192.168.0.3
netmask 255.255.255.0
பொதுவானவை
தேவை ரெண்டு பக்கமும் இருக்குமே! இங்கேந்து அங்கேயும் அங்கேந்து இங்கேயும் மாறி மாறி கோப்பை வாங்கி வழங்கிக் கொள்ளனுமே! அதுக்கு உதவுற நிரல்கள் நிறுவ வேண்டாமா!
அதான் ரெண்டு கணினிலையும்....
$ sudo apt-get install portmap nfs-common nfs-kernel-server
ஆணைக் கொடுத்து portmap, nfs-common, nfs-kernel-server ஆகிய பொதிகளை நிறுவிகிட்டேங்க! நல்லது.. இப்போ ரெண்டு கணினியையும் இணைக்க பாசக் கயிறு வேணுமே... ம்ம்ம்... அதுக்கு பிணையத்துக்குப் பயன்படும் கிராஸ் ஓவர் கேபிள் வாங்கிக் கிட்டேங்க.. மறந்துடாதீங்க - கிராஸ் ஓவர் கேபிள்னு கேட்டு வாங்குங்க...
இதை ரெண்டு கணினியின் ஈதர்னெட் துறைகளிலும் சொருகி ரெண்டுத்துக்கும் மத்தியில் ஒரு பிணைப்பை ஏற்படுத்தினேங்க...
மடிக்கணினியில் செய்தவை...
$ sudo vim /etc/hosts.deny
கொடுத்து அதில் கீழ் காணும் வரியினை சேர்க்கணும்..
portmap : ALL
அடுத்து,
$ sudo vim /etc/hosts.allow கொடுத்து
portmap : 192.168.0.3
இதுல 192.168.0.3 ங்கறது என்னோட மேசைக் கணினியோட ஐ.பி முகவரியாக்கும்..
அடுத்து,
$ sudo vim /etc/hosts கொடுத்து
192.168.0.3 kuzhal
ங்கற வரியினை சேர்க்கவும்...
அடுத்து.. எந்த அடைவினை பகிர்ந்துக் கொள்ளப் போறோம்னு முடிவு செய்யணுங்க... நான் என்னோட மடிக்கணினில /home/amachu/share ங்கற அடைவினை பகிர்ந்துக்க நினைச்சேன்..
$ sudo vim /etc/exports இல்,
கீழ்காணும் வரியை சேர்த்தேங்க...
/home/amachu/share 192.168.0.0/255.255.255.0(rw)
இதை செய்து முடிச்சப்பறம்..
$ sudo exportfs -ra கட்டளைக் கொடுக்கணும்...
இது எப்ப எல்லாம் நீங்க /etc/exports ல மாற்றம் செய்யறீங்களொ.. அப்ப எல்லாம் செய்யணும்...
அவசியம் இல்லனாலும் ஒரு தடவை portmap மற்றும் nfs-kernel-server ரெண்டுத்தையும் மீண்டும் துவக்கறது உசிதம்..
அதுக்கு,
$ sudo /etc/init.d/portmap restart
$ sudo /etc/init.d/nfs-kernel-server restart
அவ்ளோதான்!
மேசைக்கணினியில் செய்தவை...

portmap : 192.168.0.2
இதுல 192.168.0.2 ங்கறது என்னோட மடிக் கணினியோட ஐ.பி முகவரியாக்கும்..
அடுத்து,
$ sudo vim /etc/hosts கொடுத்து
192.168.0.2 amachu-laptop
ங்கற வரியினை சேர்க்கவும்...
அடுத்து.. எந்த அடைவினை பகிர்ந்துக் கொள்ளப் போறோம்னு முடிவு செய்யணுங்க... நான் என்னோட மடிக்கணினில /home/kuzhal/share ங்கற அடைவினை பகிர்ந்துக்க நினைச்சேன்..
$ sudo vim /etc/exports இல்,
கீழ்காணும் வரியை சேர்த்தேங்க...
/home/kuzhal/share 192.168.0.0/255.255.255.0(rw)
இதை செய்து முடிச்சப்பறம் முன்னாடி சொன்ன மாதிரி,

அவசியம் இல்லனாலும் ஒரு தடவை portmap மற்றும் nfs-kernel-server ரெண்டுத்தையும் மீண்டும் துவக்கறது நல்லது...

மீண்டும் மடிக்கணினியில்...
நல்லது.. எல்லாம் செஞ்சாச்சு.. எம் மடிக்கணினி மேசைக்கணினியோட பேசுதான்னு பாக்கணுமே என்ன செய்ய...
முனையத்தினை துவக்கினேன்...
$ ping 192.168.0.3
கொடுத்தேன்... அடடா... அங்கேர்ந்து இங்கே இரும மொழியிலே ரெண்டு பேரும் பேசிக்க ஆரம்பிச்சாங்க... நல்லது அங்க பகிர்ந்துக்க வேண்டு /home/kuzhal/share அடைவு கொடுத்தோமே அதை எப்படி இங்கெ கொண்டாறதுன்னு தான யோசிக்கறீங்க!
ம்ம்ம்...
$ sudo mount 192.168.0.3:/home/kuzhal/share /mnt
$ cd /mnt
$ ls
கொடுத்தா.. மேசைக் கணினில இருக்கற share அடைவுல இருக்கற கோப்புகள் பட்டியலிடப் படும்... :-) கீழ்காணும் திரைக் காட்சி உங்களுக்கு உதவி செய்யும்...
http://ubuntuforums.org/g/images/150685/large/1_laptop_to_pc_communication.png
அப்பறம் என்ன.. இங்கிருக்கறத அங்கே பார்க்க வேண்டாமா!
மீண்டும் மேசைக்கணினியில்...
மேசைக்கணினி மடிக்கணினியோட பேசுதான்னு பார்க்க...
முனையத்தினை துவக்கினேன்...
$ ping 192.168.0.2
கொடுத்தேன்... அடடா... அங்கேர்ந்து இங்கே இரும மொழியிலே ரெண்டு பேரும் பேசிக்க ஆரம்பிச்சாங்க... நல்லது அங்க பகிர்ந்துக்க வேண்டு /home/amachu/share அடைவு கொடுத்தோமே அதை எப்படி இங்கெ கொண்டாறதுன்னு தான யோசிக்கறீங்க!
ம்ம்ம்...
$ sudo mount 192.168.0.2:/home/amachu/share /mnt
$ cd /mnt
$ ls
கொடுத்தா.. மடிக் கணினில இருக்கற share அடைவுல இருக்கற கோப்புகள் பட்டியலிடப் படும்... :-) கீழ்காணும் திரைக் காட்சி உங்களுக்கு உதவி செய்யும்...
http://ubuntuforums.org/g/images/150685/large/1_pc_to_laptop_communication.png
தூள் மாமே!
இந்த ஆவணம் உங்களுக்கு பிடிச்சிருந்து பயனுள்ளதாவும் இருந்து.. உபுண்டு தமிழ் குழுமம் மென்மேலும் வளர சன்மானம் அளிக்க விரும்பினா.. கீழ்காணும் வங்கிக் கணக்கிற்கு உங்கள் சமர்ப்பணத்தை அனுப்பலாம்.. :-)
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/உபுண்டு_தமிழ்_குழுமத்தின்_வங்கிக்_கணக்கு_விவர ம்