PDA

View Full Version : கேயுபுண்டு - கேமெயிலும் ஜிமெயிலும்



amachu.techie
April 16th, 2007, 08:46 PM
மின்னஞ்சல்களில் POP வசதியைத் தரும் நிறுவனங்களுள் gmail லும் ஒன்று. ஜி மெயிலில் மின்னஞ்சல் கணக்கு வச்சுருந்தீங்கன்னா கேயுபுண்டுல கேமெயில் ன்னு ஒரு செயலி இருக்கு. இதைப் பயன்படுத்தி நீங்க ஜி மெயில் POP வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுக்கு முதல்ல உங்க ஜிமெயில் கணக்கில் POP வசதிகளை தூண்டியிருத்தல் அவசியம்.

படி 1: கேமெனுலேர்ந்து வலது பக்கம் மூனாவது படவுருக்கு "தொடர்பு கொள்" (அந்தரங்க தகவல் மேலாளர்) ன்னு பெயர் சூட்டப் பட்டிருக்கு. கான்கொயரர் க்கும் அடுத்த கடைசிப் படவுரு. அதனைச் சொடுக்குங்க... இடது பக்க பட்டியில் இரண்டாவதா "அஞ்சல்" ன்னு கொடுக்கப் பட்டுள்ளதை தேர்வு செய்து... அமைப்புகள் --> கேமெயிலை கட்டமை னை தேர்வு செய்யவும்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_k_mail_pop_-_1.png

படி 2: இடது பட்டியில் இரண்டாவதாக விளங்கும் கணக்குகள் தேர்வு செய்த பின்னர் "பெறுகிறது" தத்தினை அடைந்து சேர் பொத்தானைச் சொடுக்கி கீழ்காணும் படிக்கு தங்களின் ஜி மெயில் கணக்கு விவரங்களை உள்ளிடவும்.

கணக்கின் பெயர்: தாங்கள் விரும்பும் பெயர்.

பயனர் பெயர்: தங்களின் முழுமையான ஜிமெயில் முகவரி.

அனுப்புதல்: pop.gmail.com

துறை: 995

கடவுச் சொல்லை காக்க விரும்பினால் POP கடவுச் சொல்லை சேமிக்கவும் என்பதை தேர்வு செய்யவும்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_k_mail_pop_-_2.png

படி 3: உதிரிகள் தத்தில் கீழ்காணும் படிக்கு மாற்றங்களைச் செய்யவும்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_k_mail_pop_-_3.png

படி 4: கணக்குகள் --> அனுப்புகிறது தத்தில் உள்ள முதலாவது தத்தான "பொது" வில் கீழ்காணும் மாற்றங்களைச் செய்யவும்.

பெயர்: ஆமாச்சு

புரவன்: smtp.gmail.com

துறை: 465

சேவையக உறுதிப்படுத்தல் தேவை னை தேர்வு செய்து தங்களின் முழு ஜிமெயில் கணக்கின் பெயரையும் கடவுச் சொல்லையும் கொடுக்கவும்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_k_mail_pop_-_4.png

படி 5: பாதுகாப்பு தத்தில் கீழ்காணும் படிக்கு மாற்றங்கள் செய்யவும்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_k_mail_pop_-_5.png

படி 6: இடது பட்டியில் உள்ள அடையாளங்கள் ன் கீழ் பொது தத்தில் தங்கள் பெயர், நிறுவனம் மற்றும் தங்களின் முழு ஜிமெயில் முகவரிகளை உள்ளிடவும். இனி உங்கள் ஜிமெயில்கள் கேமெயிலுக்குள் அடக்கம். இணைய இணைப்போடு பதிவிறக்கிக் கொண்டு இணைய இணைப்பில்லாத நேரங்களிலும் வாசிக்கலாம்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_k_mail_pop_-_6.png