PDA

View Full Version : கேயுபுண்டு - கான்வர்சேஷன் மூலம் ஐ.ஆர்.சி



amachu.techie
April 15th, 2007, 04:39 PM
கேயுபுண்டு நிறுவியாச்சு.. நல்லது.. தமிழ் வசதியும் கிடைச்சாச்சு.. அது என்ன ஐ.ஆர்.சி உரையாடல் அப்டீன்னு யோசிக்கறீங்களா! உபுண்டு தமிழ் குழும ஐ.ஆர்.சி ல கலந்துக்கணும்னு விருப்பம்.. ஆனா எப்படின்னு நினைக்கிறீங்களா? ரொம்ப சுலபம்.. கீழே கொடுத்திருக்கற மூணு படிகளை பின்பற்றுங்க... அவ்ளோதான்...

1) கேபட்டி --> இணையம் --> உரையாடல் IRC Client தேர்வு செய்யவும். சேவையக பட்டியல் என்ற தலைப்போடு மேலுழும்பும் சாளரத்தில் புதிய பொத்தானைச் சொடுக்கவும்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_koversation_-_1.png

2) New Network - உரையாடல் என்ற தலைப்போடு மேலுழும்பும் சாளரத்தில்,

Network : தாங்கள் விரும்பும் பெயர்.

Identity: தங்களின் பயனர் பெயர் இயல்பாக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கும்.

செயலி துவங்கும் போதே இப்பிணையத்தில் இணைய Connect on application start up தேர்வு செய்க.

அதன் கீழுள்ள முதல் சாளரமான சேவகன்கள் கீழுள்ள சேர் பொத்தானை சொடுக்கவும். சேவகனை சேர் என்ற தலைப்போடு ஒரு சாளரம் மேலெழும்பும். அதில்,

சேவகன்: irc.freenode.net
கடவுச் சொல்: freenode ல் கடவுச் சொல்லோடு கணக்கு வைத்திருந்தால் அதனை கொடுக்கவும். இல்லையேல் அவசியம் இல்லை.

பின்னர் தானாக சேரும் வழிமுறைகள் கீழுள்ள சேர் பொத்தானைச் சொடுக்கி மேலெழும்பும் சாளரத்தில் வழிமுறை களத்தில் #ubuntu-tam கொடுத்து கடவுச் சொல் களத்தினை அப்படியே விடுங்கள்.

கீழ் காணும் திரையின் காட்சி தங்களுக்குத் துணைப் புரியும்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_koversation_-_2.png

சேவையக பட்டியல் சாளரத்தில் தாங்கள் கொடுத்த Network பெயர் வலைமனைக்கு கீழ் தெரியும். அதனடியில் #ubuntu-tam தெரியும். அதனைத் தேர்வு செய்து இணை பொத்தானைச் சொடுக்கவும். உபுண்டு தமிழ் குழும ஐ.ஆர்.சி வாயில் உங்களை அன்புடன் வரவேற்கும்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_koversation_-_3.png

நன்றி...