PDA

View Full Version : கேயுபுண்டுவில் தமிழ் உள்ளீட்டு வசதிகள்..



amachu.techie
April 14th, 2007, 06:37 PM
தமிழ் உள்ளீட்டு வசதிகளைப் பெற SKIM எனப்படும் செயலி பயன்படுத்தப் படுகின்றது. இதில் தமிழ் தட்டச்சு வசதிகள் கிடைக்கப் பெற இரண்டு பொதிகள் நிறுவப் பட்டிருத்தல் வேண்டும். அவையாவன (1) scim-modules-tables (2) scim-tables-additional.

http://ubuntuforums.org/showthread.php?t=408590 மற்றும் http://ubuntuforums.org/showthread.php?t=409311 பக்கங்களில் உள்ளபடி கேயுபுண்டுவினை தாங்கள் நிறுவியிருந்தால் இவையனைத்தும் இயல்பாகவே நிறுவப் பட்டு இருத்தல் வேண்டும்.

இதனை உறுதி செய்ய கேபட்டி --> அமைப்பு --> Adept Manager Manage Updates செயலியினைத் துவக்குங்கள். இச்செயலியினை இயக்க நிர்வாக உரிமம் பெற்றிருத்தல் வேண்டும் என்பதால் அதற்கான நுழைவுச் சொல்லினை உள்ளிடக் கோரப் படுவீர்கள். இதுவும் தங்களின் பயனர் கணக்கிற்கான நுழைவுச் சொல்லும் ஒன்றே.

Adept Manager னைத் துவக்கிய பின்னர், Search எனப்படும் களத்தில் scim-modules-tables என உள்ளிட்டு இப்பொதி நிறுவப் பட்டுள்ளதை உறுதி செய்துக் கொள்ளவும். இதைப் போன்றே scim-tables-additional நிறுவப் பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ளவும். கீழ்காணும் திரையின் காட்சி தங்களுக்கு இவ்விஷயத்தில் உதவி புரியும்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_tamil_features_-_1.png

அடுத்ததாக SKIM னை சிறிது நமது தேவைக்கேற்றார் போல் வடிவமைக்கப் போகிறோம். இதற்கு கே பட்டி --> அமைப்பு --> கான்சோல் கடைசி நிரலி எனும் பெயரில் இருக்கும் முனையத்தினைத் துவக்கி skim -d -f எனக் கட்டளைக் கொடுக்கவும். இது SKIM செயலியினை துவக்கும். இதனை திரையின் வலது கீழ் முனையில் உள்ள பச்சை நிரத்தாலான முகவுருவால் அறியலாம்.

அம்முகவுருவில் எலியத்தின் வலது புறத்தை சொடுக்குவதின் மூலம் மேலெழும்பும் பட்டியில் Configure னைத் தேர்வு செய்யவும். கீழ் காணும் திரையிலுள்ளது போல் Other எனத் தலைப்பிடப் பட்டுள்ள தத்தினை அடைந்து, Panel Program களத்திற்கு scim-panel-kde யையும் Config Module களத்திற்கு kconfig என்பதையும் தேர்வு செய்யவும்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_tamil_features_-_2.png

ஒவ்வொரு அமர்விலும் SKIM இயல்பாகவே துவக்கப் பட, சாளரத்தின் இடது மேல் முனையில் இருக்கும் Frontend ன் கீழ் தெரியும் X Window வினைத் தேர்வு செய்யவும். பின்னர் வலது புறத்தில் இருக்கும் Start skim automatically when KDE starts னைத் தேர்வு செய்யவும். Apply மற்றும் Ok கொடுத்து சாளரத்தை மூடி விடவும்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_tamil_features_-_6.png

பின்னர் /etc/X11/Xsession.d அடைவினுள் 75custom-scim_init எனும் கோப்பினை உருவாக்கப் போகிறோம். இவ்வடைவினுள் கோப்புகளை உருவாக்க தங்களுக்கு நிர்வாக உரிமம் இருத்தல் அவசியம். மேலும் உரைகளைத் தொகுக்க கேயுண்டுவில் Kate எனப்படும் செயலி இயல்பாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆக நிர்வாக உரிமத்தோடு kate னைத் துவக்க...

Alt-F2 விசைகளை ஒன்றாகத் தட்டுவதால் மேலெழும்பும் சாளரத்தில் கட்டளைக் களத்தில் kdesu kate எனக் கொடுக்கவும்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_tamil_features_-_5.png

kate சாளரம் துவக்கப் பட்ட பின்னர் கீழ்காணும் நான்கு வரிகளை அதனுள் நகலெடுத்து ஒட்டவும்.

export XMODIFIERS="@im=SCIM"
export GTK_IM_MODULE="scim"
export XIM_PROGRAM="scim -d"
export QT_IM_MODULE="scim"


http://ubuntuforums.org/g/images/150685/large/1_tamil_features_-_3.png

கோப்பினைக் காக்க வேண்டியது தான் மிச்சம். கோப்பு காக்கப் படவேண்டிய அடைவு /etc/X11/Xsession.d என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளவும். கோப்பின் பெயர் 75custom-scim_init ஆக இருத்தல் அவசியம். கீழ்காணும் திரையின் காட்சி தங்களுக்கு துணைப் புரியும்.

http://ubuntuforums.org/g/images/150685/large/1_tamil_features_-_4.png

பலே! அவ்வளவு தான். தற்போதைய அமர்விலிருந்து வெளியேறி புதியதொரு அமர்வினைத் துவக்குங்கள். பின்னர் kate செயலியினைத் துவக்கவும். Ctrl-Space விசைகளை ஒருசேர தட்டுவதின் மூலம் தமிழ் "இன்ஸ்கிரிப்ட்" உள்ளீட்டு முறையில் உள்ளிடத் துவங்கலாம். ஆங்கில விசைப்பலகையில் மட்டுமே பழகியிருந்தால் ஓசையொத்த (ஷப்தலிபி) உள்ளீட்டு முறைக்கு மாற்றிக் கொள்ளலாம்.

kate ல் உள்ளிடும் போது எழுத்துக்கள் பிசிராகத் தெரிவது ஒரு சின்னச் சிக்கல். ஆனால் உள்ளிட்ட பிறகு தெளிவாகத் தெரிகிறது. kate லும் கான்கொயரர் உலாவியிலும் தமிழ் எழுத்துக்கள் உள்ளிடப் பட்டதைக் காட்டும் திரை...

http://ubuntuforums.org/g/images/150685/large/1_tamil_features_-_7.png

ஓபன் ஆஃபீஸில் தமிழ் எழுத்துக்கள் உள்ளிடப் பட்டதைக் காட்டும் திரை...

http://ubuntuforums.org/g/images/150685/large/1_tamil_features_-_8.png

நன்றி...

shyamsundarc
June 20th, 2007, 11:23 AM
thats is worth a good fight!!
but for ppl who do not want to put any fight but syill get thje things going, i came across a tool called quillpad

http://quillpad.in/tamil

you can generally go to this site, start typing in english what you wanted to speak and this tool will ocnvert into tamil
you can then paste and put in in your mail
thats what i usually do and i enjoy it

hope you also have fun!!!