PDA

View Full Version : தமிழிலேயே பதிவு செய்யப் பழகுங்கள்



amachu.techie
March 22nd, 2007, 05:14 AM
வணக்கம்

உபுண்டு தமிழ் குழும விவாதத் தளத்தில் பங்களித்து வரும் அனைவருக்கும் நன்றி.

உபுண்டு பாரம் முழுவதிலும் ஆங்கிலத்தில் பதிவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழ் உபுண்டு விவாதத் தளத்தில் மட்டுமே தமிழில் பதிவு செய்யக் கூடிய வாய்ப்பு உண்டு.

ஆகையால் துவக்கத்தில் ஏற்கக் கூடியதே என்றாலும் விரைவில் முயன்று தமிழிலேயே பதிவு செய்யுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழில் உள்ளிடுவத்ற்கு பயிற்சி ஆகாத போதும் vanakkam போன்று தமிழ் சொற்களைப் பயன்படுத்தி உள்ளிடுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

இதனையும் தற்காலிகமானதே எனக் கருதி தமிழில் உள்ளிடுவதற்கான முயற்சியினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்!

நன்றி! :)

sarutv
March 22nd, 2007, 08:27 AM
வணக்கம்

இதனையும் தற்காலிகமானதே எனக் கருதி தமிழில் உள்ளிடுவதற்கான முயற்சியினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்!


நாம ஏன் சில வலைப்பதிவுகள் வர்ற மாதிரி, Javascriptஇல் ஆன தமிழ் உள்ளீட்டு முறைய இங்கே அறிமுகப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்வதற்கு உபுண்டு விவாததள நிர்வாகிகளிடமிருந்து அனுமதிபெற வேண்டும்.

ஆனால், இயக்குதளம் மற்றும் உலவிகளில் நேரடியாக தமிழில் உள்ளிடும் முறையே சிறந்தது.

amachu.techie
March 25th, 2007, 03:55 AM
தாங்கள் சொல்வது நல்ல யோசனை தான். தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் இது உபுண்டு ஃபாரம் கட்டுப் பாட்டில் இயங்குகிறது. மேலும் இப்பணிக்காக இயங்கும் vBulletin இதை ஏற்க வேண்டும்,

சிறிது முயற்சி எடுக்க வேண்டும். :-) தன்னார்வலர்கள் தேவைப் படுகிறார்கள்:-)

amachu.techie
April 7th, 2007, 06:41 AM
அனைவரின் கவனத்துக்காவும்... மீண்டும்...

amachu.techie
May 20th, 2007, 07:31 AM
மீண்டும் அனைவரின் கவனத்துக்காகவும்...

amachu.techie
June 24th, 2007, 10:09 AM
மீண்டும் அனைவரின் கவனத்துக்காகவும்...

ksbalaji
August 8th, 2007, 07:26 PM
:lolflag: vaazhga ungal pani
aamam , thamizhil eppadi padivu seyya vendum?
badhil kooravum
balaji

sarutv
August 9th, 2007, 03:34 PM
பாலாஜி,
தமிழில் தட்டச்சு செய்ய இரண்டு வழிமுறை உள்ளது:
1. (E-Kallappai) போன்ற மென்பொருளைப் பயன்படுத்தி உங்கள் விண்டோஸிலும், SCIM மூலம் லினுக்ஸிலும், பல செயலிகளில்(Applications) தமிழில் உள்ளீடு செய்யலாம்.
2. Firefox உலாவியில்(browser) "தமிழ் விசை (https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994)" நீட்சியை நிறுவி பயன்படுத்தலாம்.

amachu.techie
September 1st, 2007, 03:32 AM
கவனம் கொடுக்க வேண்டிய முக்கிய விடயம்.

amachu.techie
March 27th, 2008, 02:39 PM
மீண்டும் அனைவரின் கவனத்திற்காக முன்னிருத்தப் படுகிறது.

அன்புடன்
ஆமாச்சு