PDA

View Full Version : முதன்மைப் பயனரின் வசதியைப் பெற...



amachu.techie
March 4th, 2007, 01:39 PM
வணக்கம்,

உபுண்டு எட்ஜியில் முதன்மைப் பயனரின் வசதிகள் இயல்பாய் ஏற்படுத்தப் பட்டிருக்காது. பாதுகாப்பு காரணுங்களுக்காக இதனை உபுண்டுவில் தவிர்த்திருக்கிறார்கள். அதனை தாங்கள் கீழ்காணும் வழிகளைப் பின்பற்றி ஏற்படுத்திக் கொள்ளலாம்.

முனையத்திலிருந்து முதன்மைப் பயனருக்கான கடவுச் சொல்லினை தேர்வு செய்ய,

$ sudo password root

இதனைச் செய்ததும்

System --> Administratror --> Login Window வினைத் தேர்வு செய்க.

அச்சாளரத்தில் நான்காவது பட்டியாக இருக்கக் கூடிய "Security" ல் உள்ள Security பகுதிக்கு கீழுள்ள "Allow Local System Administrator login" வசதியைத் தேர்வு செய்க.


http://ubuntuforums.org/gallery/data/500/medium/root_user.png

கீழ்காணும் கட்டளையினைக் கொடுத்து எந்நேரமும் தாங்கள் முதன்மைப் பயனரின் நுழைவுச் சொல்லினை தடை செய்யலாம்.

$ sudo passwd -l root


வாழ்த்துக்கள்!

sarutv
March 14th, 2007, 02:06 AM
முடிந்த அளவு முதன்மை பயனர் கணக்குகளை நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது. sudoவைப் பயன்படுத்திக் செய்யும் கட்டளைகளெல்லாம் /var/log/auth.logஇல் பதிவு செய்யப்படுகிறது (இதைக் காண்பதற்கு System -> Administration -> System Logக்குச் செல்லவும்). இதனால் பிற்காலத்தில் என்ன கட்டளைகள் செய்யப்பட்டன என்பதையும் பார்க்கலாம். From the sysadmins point of view, sudo is good for auditing purposes.

முதற்பயனர் கணக்கை நேரடியாக உபயோகிக்க காரணம் sudoவில் அடிக்கடி கடவுச் சொல்லையிட வேண்டிய நிர்பந்தமெயாகும். இதற்கு மாற்றுவழியாக,
$ sudo -s மூலம் ஒரு root consoleஐ திறந்து, பின்னர் எவ்வளவு முறை வேண்டுமானாலும்
$ sudo <கட்டளை> என இடலாம்.

ராஜா
June 10th, 2007, 11:23 AM
முதன்மைப் பயனர் வசதிகள் என்றால் என்ன..?

amachu.techie
June 23rd, 2007, 02:27 PM
root user access/ rights :-)