PDA

View Full Version : கெய்ம் மூலம் Irc



amachu.techie
January 27th, 2007, 09:38 AM
உபுண்டுவோடு நிறுவப் பெறும் கெய்ம் (Gaim) செயலியின் துணைக் கொண்டு IRC உரையாடலில் பங்கு கொள்வது குறித்துப் பார்க்கலாம்.

முதலில் Applications --> Internet --> Gaim Internet Messenger தேர்வு செய்வதன் மூலம் கெய்ம் செயலியைத் துவக்குங்கள்.

http://ubuntuforums.org/gallery/data/500/medium/irc_thru_gaim1.png

மேலே காண்பதைப் போன்று Accounts என்றத் தலைப்புடன் தோன்றும் சாளரத்தில் Add எனத் தெரிகின்ற பொத்தானை சொடுக்கவும். :-) Add Account என்ற தலைப்புடன் சாளரம் ஒன்று தோன்றும்.

இச்சாளரத்தில் கீழ் காணும் விவரங்களை தேர்வு/ பூர்த்தி செய்யவும்.

Protocol: IRC

Screen Name: <தங்களின் புனைப் பெயர்> ## இப்புனைப் பெயர் IRC சேவக மையத் தோடு பதியப் பட்டிருத்தல் நல்லது.

Server: <IRC சேவக மையத்தின் பெயர்> ## பொதுவாக நாம் பயன்படுத்துவது irc.freennode.net

Password: சேவக மையத்தோடு தங்கள் பெயர் பதிவு பெற்றிருந்தால் அதன் கடவுச் சொல்

Alias: தாங்கள் எங்ஙனம் அறியப் பட விரும்புகிறீர்களோ அப்பெயரை பதிவு செய்யுங்கள்.

கடவுச் சொல்லை நினைவில் நிறுத்த விரும்பினால் Remember Password னைத் தேர்வு செய்யலாம்.

Save பொத்தானை சொடுக்கவும் :-)

http://ubuntuforums.org/gallery/data/500/medium/irc_thru_gaim_2.png

சிறிது விநாடிகள் பொறுத்த பின்னர் மேலே காணும் படி Nick Serv என்ற தலைப்பிடப் பட்ட சாளரம் தோன்றும். அதிலுள்ள உள்ளீட்டுப் பட்டியில் தாங்கள் நுழைய விரும்பும் வாயிலின் பெயரைப் பதிவுச் செய்யவும். :-) உபுண்டு தமிழ் குழுமத்தின் வாயில் #ubuntu-tam

பதிவு செய்வதற்கான கட்டளை: /join #ubuntu-tam

http://ubuntuforums.org/gallery/data/500/medium/irc_thru_gaim_3.png

மேற்படி படத்தில் காணும் படிக்கு தாங்கள் பதிவு செய்த வாயிலில் நுழைந்து அங்குள்ள, பிற பயனர்களுடன் தங்கள் உரையாடலைத் தொடரலாம். :-)