PDA

View Full Version : விசைப் பலகைகளின் வடிவமைப்புகள்



amachu.techie
November 17th, 2006, 06:52 PM
வணக்கம்,

கணினியில் தமிழை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டதுமே நம் நினைவிற்கு வருவது விசைப் பலகைகளின் வடிவமைப்புகள் தாம்..

எவ்வாறு நாம் தமிழ் எழுத்துக்களை உள்ளிடப் போகிறோம்? எந்த வகையான விசைப்பலகையைக் கையாள்வது? எது நமக்கு உகந்தது? இப்படி பல சந்தேகங்கள் ஒவ்வொரு மனதிலும் எழும்.

அதனை தீர்க்க இத்தறி உதவட்டும்..

வாழ்த்துக்கள்

cnu
November 18th, 2006, 04:00 PM
எனக்கு தமிழ் தட்டச்சு முறை தெரியாது. அதனால், TamilKey என்ற ஒரு extension மூலம் இதனை எழுதுகிறேன்.
http://tamilkey.mozdev.org/
இதில் vaNakkam என்று எழுதினால் வணக்கம் என்று தமிழில் வரும்.

இது firefoxல் மட்டுமே இருக்கிறது.

இது போல transliteration வசதி உபுண்டுவில் இருக்கிறதா?

amachu.techie
November 18th, 2006, 04:09 PM
உபுண்டுவில், SCIM உள்ளீட்டு முறையானது Phonetic முறையில் இவ்வசதியை செய்து தருகிறது.

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/தமிழ்_வசதிகள்_பெற்றுக்கொள்ள

மேலும் Inscript என்றொரு விசைபலகையும் உண்டு.

ரெமிங்டன் என்ற தமிழகத்தில் வழக்கத்தில் உள்ள விசைப் பலகை முறையை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளலாம். :)

http://nrcfosshelpline.in/Suzhi/ரெமிங்கடன்_தட்டச்சு_முறை

மேற்கண்ட இணைப்பைப் பயன்படுத்தவும். :-)