PDA

View Full Version : [solved] யுபுண்டு 7.10ல் தமிழ்



srikrishnan
December 29th, 2007, 08:39 PM
அன்புடன்.

நான் லைனக்ஸ் இயங்கு தளத்திற்கு புதியவன்.

என்னுடைய AMD 64 X2 Dual, Core Processor 3600 +, 2GhZ, 1 GB Ram உள்ள கணினியில் இரண்டாவது இயங்கு தளமாக யுபுண்டு 7.10, 64பிட்டை நிறுவியுள்ளேன்.

'Languages' tool bar மூலமாக தமிழை நிறுவிவிட்டேன். எனது TaskBarல் விசைப்பலகை icon இடம் பெற்றுள்ளது.

'Scim setup'ல் தமிழ் enable ஆகி உள்ளது.

'Synaptic Package Manager'ல் இரண்டு தமிழுக்கான மென்பொருட்களும் நிறுவப்பட்டுள்ளதற்கான குறிகளும் உள்ளன.

ஆனாலும் என்னால் Task barல் உள்ள iconயை இடது பக்கமாக அலுத்தினால் எந்த ஒரு மாற்றத்தையும் காண முடியவில்லை, ஆனால் வலது பக்கமாக அலுத்தினால் 'Scim setup' திரை தோன்றுகிறது.

எனக்கு தயவுகூர்ந்து யாரேனும் உதவி செய்ய முடியுமா?

FYI: இதனை என்னுடைய Windows XP இயங்குதளத்திலிருந்து அனுப்புகிறேன்.

இவண்
இரா. கிருஷ்ணன்

srikrishnan
January 2nd, 2008, 10:48 AM
Hi All,

Can anybody help me to solve the problem?

amachu.techie
January 4th, 2008, 07:08 AM
இதன் மேல் சொடுக்கி (http://ubuntu-tam.org/avanam/ubuntu/ubuntu_niruva.pdf) பதிவிறங்கும் ஆவணத்தினை பாருங்களேன்.

ஸ்கிம் வசதிகளுக்கு (https://wiki.ubuntu.com/TamilTeam/Ubuntu_Tamil_Howto) இப் பக்கத்தினை அணுகவும்.

srikrishnan
January 14th, 2008, 06:08 PM
ஆமாச்சுவிற்கு,

இந்த மடலை நான் என் லீனக்ஸ் இயங்கு தளத்திலிருந்து அனுப்புகிறேன். தங்களுடைய உதவிக்கு மிக்க நன்றி.

இன்னும் சில பிரச்சினைகளை அடுத்த கட்டமாக எதிர்கொள்கிறேன்.

Oppenoffice Word Processorலோ அல்லத Text Editorலோ தட்டச்ச செய்யும் போத து மற்றும் சு போன்ற எழுத்துக்கள் மற்றும் எழுத்துக்ளின் மீது புள்ளி ஆகியவை சரியாக வருவதில்லை,

நான் என்ன செய்யவேண்டும் இதனைக் கலைவதற்கு, எனக்கு உதவுங்கள்?

நட்புடன்,
ஸ்ரீகிருஷ்ணன்

amachu.techie
January 28th, 2008, 09:14 AM
//நான் என்ன செய்யவேண்டும் இதனைக் கலைவதற்கு, எனக்கு உதவுங்கள்?//

தமிழ் மொழிக்கானப் பொதிகள் நிறுவினீர்களா?